டி-சர்ட் போட்டு தினுசு தினுசாக தினந்தோறும் திகில் கிளப்பி வருகிறது திமுக. ஹிந்தி தெரியாது போடா என ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒரு வாசகம் அடங்கிய டி-சர்ட்டுகளை திமுகவினர் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சைக்கிள் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்தப்புகைப்படத்தில் கருணாநிதி, பெரியார், அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு கீழே தமிழ் எங்கள் உயிர் என்கிற வாசகம் அடங்கியுள்ளது.

தமிழ் என்பது மட்டும் தமிழிலும் எங்கள் உயிர்  என்பது ஆங்கிலத்திலும் இடம்பெற்று இருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. இரட்டை மொழி கல்வி மட்டும் போதும் என்பதை வலியுறுத்த இந்த டி-சர்ட்டை அவர் அணிந்து இருந்தாலும் தமிழ் எங்கள் உயிர் என்பதை முழுவதுமாக தமிழில் எழுதி இருக்கலாம் என்கிறார்கள் பலரும்.

 

மற்றொரு முக்கியத் தகவல் மு.க.ஸ்டாலின் பயிற்சி செய்யும் சைக்கிள்ன் இரு டயர்களின் மதிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்.