ஒரே விஷயத்தை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு செயல்படுத்திய ஊரடங்கு தோல்வியில் முடிந்தது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருகிறார்.

இந்தநிலையில், ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிக்கப்படும் அளவைப் பதிவிட்டு மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்த ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், ‘பைத்தியகாரத்தனம் என்பது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பத் செய்துவிட்டு வெவ்வெறு முடிவுகளை எதிர்பார்ப்பது’ என்று குறிப்பிட்டுள்ளார்.