கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 10 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல்; திமுக-வினருக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் முதலான காரணங்களாலும் 

 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த

K. மாதவராமானுஜம் (தச்சநல்லூர் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர்)

 மணிமாளிகை M. கணேசன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர்) 

செ. பாலசுப்பிரமணியன் (10-ஆவது வட்டக் கழகச் செயலாளர், தச்சநல்லூர் தெற்கு பகுதி)

B. விஜி, (க/பெ. பாலசுப்பிரமணியன்)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த,

N. கரிகாலன் (எ) ரமேஷ், (மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் )

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த,

M. அங்குசாமி (ராமநாதபுரம் நகரக் கழகச் செயலாளர்)

TR. சீனிவாசன் (ராமநாதபுரம் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்) 

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த,

M. கண்ணாயிரம் (கழகப் பொதுக்குழு உறுப்பினர், உடுமலைப்பேட்டை தொகுதி)

M. கெபீர் (ரூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்)

K. குமரேசன் (உடுமலைப்பேட்டை நகர 10-வது வார்டு கழகச் செயலாளர் 

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.