Asianet News TamilAsianet News Tamil

தயாரான கர்நாடக அரசு... இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா.. பரபரப்பு தகவல் வெளியானது..!

சசிகலா விடுதலையின் போது கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Exciting news about Sasikala release
Author
Bangalore, First Published Dec 17, 2020, 10:01 AM IST

சசிகலா விடுதலையின் போது கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதியன்று விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.

Exciting news about Sasikala release

இந்நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் தொடர்பாக கர்நாடக உள்துறைக்கு அம்மாநில உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், சசிகலா விடுதலையாகும் தேதியன்று ஏராளமான தொண்டர்கள் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு சசிகலாவை அழைத்து செல்ல வரலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. 

Exciting news about Sasikala release

இதனை கருத்தில் கொண்டு இன்றை தினம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளல் ஏற்படாத வகையில் சசிகலாவின் தொண்டர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வராத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக விடுதலையாகும் கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமதமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி இரவு 7 மணிக்கு மற்ற கைதிகள் விடுதலை ஆவார் என்றும், சசிகலாவை இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Exciting news about Sasikala release

இதேபோல், சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்கு ஏற்பாடு செய்திருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கர்நாடக உளவுத்துறையின் அறிக்கையின் படி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், விடுதலை நாளின் சூழலை பொறுத்து இதில் சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios