போண்டாவுக்கும், கோழிக்கும் பரம்பரை சம்பந்தம் எதுவும் கிடையாது. ஆனா இந்த ரெண்டையும் இணைச்சு பேரு வெச்சாங்க பாருங்க அந்த உயிருக்கு, அதை நம்பித்தான் அந்த மாவட்ட பொழப்பே நடந்துனு இருக்குது. ஏதோ  ஒரு பெரிய புள்ளிக்கு அசிஸ்டெண்டா அரசியல்ல நுழைஞ்ச மனுஷன், ஒரு கட்டத்துல தாறுமாறா வளர்ந்து மாவட்ட செயலாளராகவே ஆகிப்போனார்.

சைடு டிஸ் இல்லாத பார்ட்டியில, ஊறுகாதான் சிக்கன் 65-ங்கிற மாதிரி வேற வழியில்லாம அந்த பெரிய தேர்தல்ல அவரை வேட்பாளராக்குச்சு கட்சி. எம்பி எம்பி குதிச்சு மனுஷன் எங்கேயோ போயிட்டார். ரெண்டு ஊரு தள்ளி அரசியல் பேச தெரியாத மனுஷன் போயி நின்ன இடமோ டெல்லி. அண்ணனுக்கு கையும் ஓடல, காலும் ஓடல. இப்படி லக்கு கூரைய பிய்ச்சுக்கினு கொட்டுறதுல அவரோட அல்லக்கைகளுக்கு இதயமே துடிக்கலை. ஆளாளுக்கு அப்படியொரு ஷாக்கு.

அண்ணனுக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு. வாரத்துல ரெண்டு மூணு ராத்திரியானா ராவா வேணும், கூடவே புதுசா ஒரு ரூபாவும் வேணும். அதுவும் ஒரே மாசத்துக்குள்ளே ஒரு முகம் ரிப்பீட்டு ஆச்சுன்னா கெட்ட பயனாகிடுவாரு அவரு. டெல்லிக்கு போன இடத்துல புதுசு புதுசா எங்கேபோயி அள்ளிக்கினு வர்றதுன்னு புரியாம முழிச்சாங்க அல்லக்கைகள்.

ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு அண்ணனுக்கு எதுவும் படியல, கண்ட்ரோல் பண்ணவும் முடியலை. ஒரு நாள் காலையில

மல்லாக்க படுத்து மளமளன்னு யோசிச்சவருக்கு பளீர்னு உதிச்சுது ஒரு ஐடியா. சட்டுன்னு மொபைலை எடுத்து பட்டுன்னு ஒரு போனை போட்டாரு தமிழ்நாட்டுல உள்ள அந்த நூல் நகரத்துக்கு. அண்ணன் சொந்த மாவட்டத்துல இருக்குறப்ப இவருதான் அவருக்கு ’ஆஸ்தான நபர்’. அந்த விஷயத்தை அரேஞ்ச் பண்றதுல பல வருஷமா புழங்கி கரைகண்டு டபுள் எம்.ஏ. பட்டமே வாங்கினவரு.

மொபைலை எடுத்த மனுஷன் ‘தலைவரே அவ்ளோ பெரிய பதவிக்கு போனதும் நம்மள மறந்துடுவீங்கன்னு நினைச்சேனுங்கோ. ஆனா ஒங்களுக்கு ஒரு தேவைன்னா அதை தீர்க்க என்னால மட்டும்தான் முடியுமுண்ணு நிரூபிச்சுட்டீங்கோ! யாரு வேணும், எப்டி வேணும்?’ என்று கொக்கியை போட்டார் அங்கிள்.

மறுமுனையில் ’நீ இருக்கிற தைரியத்துல உலகத்தோட எந்த மூலைக்கும் வெறுங்கைய வீசிட்டு போயிடலாம்யா.

கிட்டத்தட்ட ஒரு வாரமாச்சு எல்லாத்தையும் பார்த்து. இங்க குளிர் தாங்க முடியலை. அதனால கொஞ்சம் வீக்கமான ஆளா அனுப்பு.’ என்று சொல்லி லைனை கட் செய்துவிட்டார்.

தலைவர் ராத்திரி ரூம் வந்து சேர்வதற்குள் ஃப்ளைட்டை பிடித்து அனுப்பப்பட்டிருந்தது அந்த பளிங்கு பாவை. சிங்கிள் காட் கட்டிலொன்று சிங்கிளாய் நடந்து வந்தால் எப்படியிருக்கும்! அப்படியொரு உருவம். அப்படியே கழுத்தின் கீழே நோட்டமிட்ட தலைவருக்கு தலை சுற்றிவிட்டது. மந்த்ரா, நமீதா, வினிதா போன்ற எக்ஸ்ட்ரா லார்ஜ் நாயகிகளின் அங்கங்களை சேர்த்துப் பிசைந்து செய்தது போல் அப்படியொரு பிரம்மாண்டம். அண்ணன் பாய்ந்துவிட்டார்!...

அண்ணனுக்கு டெல்லி பதவி முடியும் வரை அவரது காட்டேஜை அலங்கரித்த எக்ஸ்ட்ரா லார்ஜ் எலந்தவடை இவர்தான். இவரது ஹைலைட்ஸ் க்வாலிட்டிக்காகவே அள்ளியள்ளி கொடுத்தார் அண்ணன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் பறந்து பறந்து அள்ளி வந்த பொண்ணு போண்டா கோழி மாவட்டத்தில் தனி கோட்டையே கட்டிவிட்டார் தனக்காக.

திடீரென பதவி பஞ்சராகி சொந்த மாநிலத்துக்கே பேக்-அப் ஆனார் அண்ணன். அதன் பிறகு அவருக்கு அரசியலில் பெரிய எழுச்சி இல்லை. ஆனாலும் சேர்த்து வெச்ச காசில் செம்ம சவுகர்யமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனுஷன், அதில் கால் பங்கை இந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் அம்மணிக்குதான் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்பவும் மாசத்துக்கு நாலு நாளாவது தன் மாவட்டத்தில் இருந்து நூல் மாவட்டத்துக்கு பாலம் போடாமல் இருக்க முடியவில்லை அண்ணனால். இவர் கார் சவுண்டு கேட்டாலே அந்த பெரிய கேட் ஓப்பனாகி, பின் அடங்கிக் கொள்ளும். அடுத்த ஆறு மணி நேரத்துக்கு கொசு கூட அந்த பங்களா பக்கம் தலைவைத்து படுக்க கூடாது. இதுதான் கண்டிஷன்.

மீண்டும் ஒரு டெல்லி வாய்ப்பு வந்தால், அண்ணன் தன் மாவட்டத்துக்கும் இந்த நூல் மாவட்டத்துக்கும் இடையில் தனி பாலம் கட்டி, பரவசமாகும் நேரமெல்லாம் பறந்து வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

காரணம், எக்ஸ்ட்ரா லார்ஜின் எஃபெக்ட் அப்படி!