Asianet News TamilAsianet News Tamil

"எனது கொடும்பாவியை எரித்த நண்பர்களுக்கு நன்றி... ஆயுட்காலம் நீடிக்கும்" - ஈவிகேஎஸ் செம பதில்!!!

evks thanks to whom burnt his effigy
evks thanks to whom burnt his effigy
Author
First Published May 28, 2017, 4:50 PM IST


ஜெயலலிதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உருவ பொம்மையை தீபா பேரவையினர் எரித்தனர். பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்மந்தபட்டவர்களின் ஆயுள்காலம் நீடிக்கும் எனவும், எனது கொடும்பாவியை எரித்தவர்களுக்கு நன்றி எனவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வந்தார். அப்போது சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட உள்ளதாகவும், அதை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

evks thanks to whom burnt his effigy

இதையடுத்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யபட்டது தவறு என்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என்றும் அவர் குறிபிட்டார்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உறுவ பொம்மையை தீபா பேரவையினர் எரித்தனர்.

evks thanks to whom burnt his effigy

இதுகுறித்து செய்தியாளர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர். பதிலளித்து பேசிய அவர், பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்மந்தபட்டவர்களின் ஆயுள்காலம் நீடிக்கும் என்பார்கள். எனவே என்னுடைய கொடும்பாவியை எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios