நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ்..! உடல் நிலை எப்படி உள்ளது.? மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
ஈவிகேஸ் இளங்கோவனுக்கு நெஞ்சு வலி
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டயிட்டார். இந்த தேர்தலில் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் நேற்று இரவு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஈவிகேஎஸ் அனுமதிக்கப்பட்டார்.
காங். எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் கங்கிரஸ் கட்சியினர்!!
உடல்நிலையில் முன்னேற்றம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவரை இருதய துறை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தனர். தொடர் சிகிச்சையும் வழங்கப்பட்டது, இந்தநிலையில் ஈவிகேஎஸ் உடல்நிலை தொடர்பாக கேட்டறிவதற்காக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்