வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துகிகும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. 7வது சுற்று வரை அதிமுக முன்னிலை வகித்தது. அடுத்தடுத்த ரவுண்டுகளில் திமுக முன்னிலை பெற்றது. நூலிழையில் அதிமுக வெற்றியை பறிகொடுத்தது. வேலூர் தொகுதியில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ வாக்காளர்கள் உள்ளனர். இந்த இரு மதத்தை சேர்ந்தவர்களின் வாக்கு எண்ணிக்கை மட்டும் 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. 

இதையும் படிங்க: -துரைமுருகனுக்கு கடைசி வரை மரண பயத்தை காட்டிய வேலூர் மக்கள்... பீதி அகலாத திமுக பொருளாளர்..!

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தி.மு.கவிற்குத்தான் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க-வினரும் இதனை நம்பி வருகின்றனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றுள்ளார். ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகள் பெற்றார். வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் பரிதாபமாக வெற்றி பெற்றார். 

கிறிஸ்தவ – முஸ்லிம் வாக்குகள் 4.5 லட்சம் இருந்தும், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு 485340 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. எனவே, இந்துக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்களித்துள்ளனர். இது இந்துக்களின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது. வேலூரில் இந்து ஓட்டு வங்கி உருவாகி உள்ளது. 

இதன் மூலம் இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.மு.க-விற்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

இதையும் படிங்க:-வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய்... சால்வைக்கு பதில் காசு கேட்கும் மதிமுக..!