வேலூரில் காலையில் அதிமுக முன்னிலை வகித்தது. பிறகு திமுக முன்னிலை பெற்றார். இவருக்கும் சிறிய அளவிலேயே வாக்கு வித்தியாசம் இருந்து வந்ததால் இரு கட்சியினருமே பீதியடைந்து வந்தனர்.   

வேலூர் மக்களவை தொகுதிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லக்‌ஷ்மி ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஏ.சி.சண்முகம் திடீரென ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் பின் தங்கினார். இதனை அடுத்து கதிர் ஆனந்த், அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தார். எனினும், திடீரென அவரது முன்னிலை வாக்கு வித்தியாசம் குறைந்தது.

நிமிடத்திற்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் அதிகரித்தும் குறைந்தும் வந்ததால், தேர்தல் முடிவுகள் கடும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இறுதிகட்டம் வரை முன்னிலையில் இருந்த கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்கிற இரு கட்சி வேட்பளர்களுமே கலங்கித் தவித்தனர். குறிப்பாக துரைமுருகன் தனது மகனின் வெற்றி பெறுவாரா? தோல்வியை நோக்கிச் செல்வாரா என்கிற மரண பயத்திலேயே இருந்துள்ளார். மகன் வெற்றி பெற்ற பிறகும் அவரிடம் இருந்து பீதி அகலவில்லை என்கிறார்கள்.