ரஜினியே வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என தி.க.தலைவர் கி.வீரமணி உறுதியாக கூறுகிறார். 

பாஜகவை கடுமையாக விமர்சித்து வருபவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், ‘‘தமிழக பி.ஜே.பி தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் பெயரும் இருப்பதாக கூறுகிறார்கள். இது திராவிட மண், பெரியார் மண். இங்கு ஒருபோதும் தாமரை மலராது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு என்ன கதி நேர்ந்தது?

இங்கு கொள்கைரீதியான போர் நடந்து கொண்டிருக்கிறது. தனிநபர்களின் பெருமையோ, திறமையோ இங்கு சாதித்துவிட முடியாது. திரையுலகில் ரஜினிகாந்த் பிரபலமானவராக இருக்கலாம். ஆனால், அவர் உட்பட யாரைத் தலைவராகப் போட்டாலும் இந்த மண்ணில் தாமரை ஒருபோதும் மலராது” என அவர் தெரிவித்துள்ளார்.