திமுகவின் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு கட்சியின் தலைவர், துணைபொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இதில் தலைவர் பதவி ஸ்டாலினுக்கு தான் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் பொருளாள்ர் பதவி என்று வரும் போது கடுமையான போட்டி நிலவுகிறதாம் திமுகவினுள்ளே. 

முன்னர் கலைஞர் உயிருடன் இருந்தபோது செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமை மற்றும் பொருளாளரின் பணியான கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்வது என எல்லா வேலைகளையும் ஒட்டுமொத்தமாக மேற் கொண்டிருக்கிறார்.
இப்போது தலைவராக அவர் பொறுப்புவகிக்க போவதால் திமுகவின் கோடிக்கணக்கான சொத்துக்களின் கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்திட ஒரு திறமையான நபரை தேர்வு செய்திடவே இந்த பொருளாளர் பதவிக்கான போட்டியும் இப்போது நடக்கவிருக்கிறது. இதில் கலைஞரின் குடும்பத்தினர் சிலர் இந்த பதவிக்கு போட்டி இட விரும்பி இருக்கின்றனர். 

ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த பொருளாளர் பதவி நிச்சயமாக துரைமுருகனுக்கு தான் எனவும் இதனிடையே தகவல்கள் வெளியாகி இருந்தது.

கட்சியில் தற்போது ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் தரும் நபராக துரை முருகன் இருப்பதால் அவருக்கு இந்த பதவி கிடைத்திட அதிகம் வாய்ப்புகள் இருந்தும் அது நிறைவேறுவதில் பல சிக்கல்கள் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்த பொருளாளர் பதவிக்கு வேறு சில திமுக பிரமுகர்களும் விருப்பப்படுவதால் திமுகவினுள் தற்போது கடும் போட்டி சூழல் நிலவுகிறது. இந்த பதவி மீது திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான, எ.வ.வேலுவுக்கும் ஒரு ஈடுபாடு இருக்கிறது.

இதனால் துரைமுருகன் கடும் அதிருப்தியில் காணப்படுகிறார். இதில் பொருளாளர் பதவியை அடைந்திட வேலு தன்னாலான முயற்சிகளை மிக கடுமையாக செய்துவருகிறார். 

இதனால் கடும் நெருக்க்டிக்கு உள்ளாகி இருக்கும்  ஸ்டாலினும் தற்போது அமைதி காத்துவருகிறார். இது வரை நெருக்கடி கொடுத்துவந்த எ.வ.வேலு எனக்கு இந்த பதவி கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை துரைமுருகனை தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் இந்த பதவியை கொடுங்கள் என்று வேறு கோபமாக தெரிவித்திருக்கிறாராம். 

இந்த பதவி பிரச்சனையால் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கும் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பது என்று குழம்பி போயிருக்கிறார் ஏற்கனவே திமுகவில் எப்போது பிரச்சனைகள் வெடிக்கும் என காத்திருக்கும் பலருக்கும் இந்த போட்டி விஷயம் சாதகமாக முடியாமல் இருந்தால் சரி.