22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிப்பதால் எடப்பாடி ஆட்சி தொடர்வது உறுதியாகி உள்ளது. 

சாத்தூர், சோளிங்கர், சூளூர், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, அரூர், ஒசூர், மானாமதுரை, விளாத்திகுளம் ஆகிய 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடப்பிடாரம், குடியாத்தம், திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், பெரியகுளம், பரமக்குடி, பெரம்பூர் பூந்தமல்லி, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 

இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வது உறுதியாகி விட்டது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு கண்ட மு.க.ஸ்டாலின் 11 தொகுதிகளை வென்றாலும் அவரது முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.