ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளர் இவரா? வெளியான தகவல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காரணத்தால் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஆளும் திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், கடந்த அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் தமாகாவுக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் கிடப்பதில் சிக்கல் இருப்பதால் இந்த முறை தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான கே.வி.ராமலிங்கம் 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை போட்டியிட்டு வெற்றி ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.