ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது... அண்ணாமலை கருத்து!!
ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 13 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 97 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சுமார் 57 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: EVKS. இளங்கோவன் வெற்றி செய்தியை கேட்டு, சாலையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த தொண்டர்!
அதிமுக வேட்பாளர் 37,409 வாக்குகளை பெற்று பின்னடைவில் உள்ளார். இந்த நிலையில் ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது.
இதையும் படிங்க: இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் - மு.க. ஸ்டாலின் உறுதி!
கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றியிருக்கிறோம், இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கும், பொதுத்தேர்தலில் மற்றொரு கட்சி ஜெயிக்கும் என்ற வரலாறு தமிழகத்தில் உண்டு. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.