Ernakulam Peace International school that stimulates communalism

இஸ்லாமிய மத வாத கருத்துக்களை கற்பிப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள Peace International பள்ளியை இழுத்துமூட கேரள அரசு எத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள Peace International பள்ளியில் இஸ்லாமிய மதம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய பாடங்கள் கற்றுத்தருவதாகவும், என்சிஇஆர்டி, சிபிஎஸ்சி அல்லது மாநில அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றவில்லை அந்தப் பள்ளி பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கேரள மாநில கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நடத்திய விசாரணையில் அப்பள்ளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானது என தெரியவந்தது.

கலெக்டர் மற்றும் கல்வித்துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கைகள் பள்ளிக்கு எதிராகவே உள்ளது என்றும் எனவே பள்ளியை மூட உத்தரவிட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விசாரணை அறிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் அப்பள்ளிமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

எர்ணாகுளம் Peace International பள்ளி மும்பையை சேர்ந்த இஸ்லாமிக் கல்வி நிறுவனம் வழங்கிய பாட புத்தகத்தை பின்பற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கேரளாவை சேர்ந்த 21 பேர் பயங்கரவாத இயக்கத்தில் இணைய சென்ற போது இந்த Peace International பள்ளி உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் வந்தது. 

மாயமானவர்கள் அனைவரும் காசர்கோட், பாலக்காடு, மலப்புரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள பீஸ் பள்ளிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

Peace International பள்ளியில் உள்ள புத்தகத்தில் கேட்கப்பட்டு இருந்த சர்ச்சைக்குரிய கேள்வியும், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் அந் பள்ளி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது

அந்த புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் அரசு அதிகாரிகள் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஒரு வேளை உங்கள் நண்பர் ஆடம்/சுஷானே முஸ்லிம் மதத்துக்கு மாற விரும்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள். கீழே காண்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடு.

1. அவன்/அவள் பெயர்களை அஹமத்/சாரா என்று உடனடியாக மாற்ற வேண்டும்.

2.. அவன்/அவள் செயின் அணிந்திருந்தால் அதை கழற்ற வேண்டும்.

3 . ஷஹதத் (இஸ்லாமிய இறை நம்பிக்கையின் விசுவாச அறிக்கை) கற்க வேண்டும்.

4. பெற்றோர்கள் முஸ்லிம் இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

5. ஹலால் சிக்கன் சாப்பிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்று மற்ற மதத்தினரையும் இஸ்லாம் மதத்துக்கு மாற்றும்படி கேள்வி இருந்தது, அதற்கு அளிக்கப்பட்ட சில பதில்களும் மத ஒற்றுமையை குலைக்கும்படி இருந்ததும் சர்ச்சைக்கு காரணமாக இருந்தது.

இதுதொடர்பாக பாட புத்தகத்தை தயாரித்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் ஜாகீர் நாயக்கிற்கு ஒப்பாக கருதப்படும் இஸ்லாமிய மதபோதகர் எம் எம் அக்பர் தலைமையில் கேரளாவில் வெவ்வேறு மாவட்டங்களில் 15 பள்ளிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. 

இப்போது மூட உத்தரவிடப்பட்டு உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது.