அதிமுகவில் இருப்பவர்கள், வெளியேறி சென்றவர்கள் அத்தனை பேரும் எனது நண்பர்கள். நாம் என்ன பண்ண முடியும்? இங்கே காட்டுமிராண்டித்தனமாக 60, 70 தலைவர்களை தொடர்ச்சியாக எம்.எல்.ஏக்கள் 20, 22 உட்பட எல்லோரையும் சர்வாதிகாரியாக வெளியேற்றி வருகிறார்.

‘‘அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். ஒருங்கிணைக்கிறேன் என்றவரை நீக்கியுள்ளார் துரோகி எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அதிமுக மூத்த தலைவர் மூத்த தலைவர், அம்மாவினுடைய நம்பிக்கைக்குரியவர், புரட்சித்தலைவர் அம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் செம்மையாக இந்த கழகத்திற்கு உழைத்தவர், ஒன்பது முறை வெற்றி பெற்றவர், அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்று இறங்கினார் செங்கோட்டையன். அவரை நீக்கி அவர் தான் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி என்கின்ற துரோகி அவரை அடையாளம் காண்பித்து விட்டார்.

ஒருத்தர், இரண்டு பேர் இல்லை. அதிமுகவில் இருந்து 50, 60 தலைவர்கள் வெளியே சென்று விட்டார்கள். சசிகலா, ஓபிஎஸ், அண்ணன் செங்கோட்டையனில் இருந்து இப்படி எத்தனையோ பேரை என்னால சொல்லிக் கொண்டே போக முடியும். அண்ணன் செங்கோட்டையன் அடுத்து என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும் அவர் உங்களிடத்தில் சொல்வி விடுவார். எங்கே சென்றாலும் எல்லோரிடத்திலும் சொல்லிவிட்டுத்தான் செல்வார். எங்கே செல்வார் என என்னால சொல்ல முடியாது. ஆனால் எங்கே அவர் சென்றாலும் அதிமுகவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில்தான் நிற்பார்.

அதிமுகவில் இருப்பவர்கள், வெளியேறி சென்றவர்கள் அத்தனை பேரும் எனது நண்பர்கள். நாம் என்ன பண்ண முடியும்? இங்கே காட்டுமிராண்டித்தனமாக 60, 70 தலைவர்களை தொடர்ச்சியாக எம்.எல்.ஏக்கள் 20, 22 உட்பட எல்லோரையும் சர்வாதிகாரியாக வெளியேற்றி வருகிறார். அதிமுகவில் ஹிட்லராக உட்கார்ந்து இருக்கிற பழனிசாமிக்கு எதிராக என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம். அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்துவிட்டார். அதை நடைமுறைப்படுத்த எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். அதுதான் இப்போது நடக்கிறது. எஸ்.ஐ.ஆரால் 60 ஆயிரம் ஓட்டுகள் திண்டுக்கல் விட்டுப் போய்விட்டது என்கிறார்கள். ‘‘அது நிறைய விட்டுப் போச்சுப்பா.. அதை வைத்து தானே பீகாரில் ஜெயித்தார்கள். தம்பி அதே போல் இங்கேயும் இருந்து விட்டு போகட்டும் தம்பி’’ என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

‘‘நான் எம்.பி., என்னை உள்ளே சேர்க்க மாட்டேன் என்கிறார்கள். நான் டெல்லிக்கு போய் தெருவில் நிற்கிறேன். நானும், இன்பதுரையும் வெளிய நிற்கிறோம்’’ என்கிறார் அண்ணன் சி.வி.சண்முகம். இதை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்கள். அதிமுகவில் இப்போது இருப்பவர்கள் புரோக்கர்கள் ஆகிவிட்டார்கள். வெளியேறும் இழப்பை நாம் என்ன செய்வது? அதிமுகவில் இந்த இழப்புகளை ஈடு செய்ய முடியவில்லை. நிச்சயமாக செங்கோட்டையன் என்ன முடிவெடுத்தாலும் உங்களிடம் சொல்வார், அறிவிப்பார்’’ அறிவிப்பார் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.