Asianet News TamilAsianet News Tamil

இந்த விடியாத அரசால் காவலருக்கே பாதுக்காப்பில்லை – எடப்பாடி கே.பழனிசாமி காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலை பிடிக்க விரட்டி சென்ற போது எஸ்.எஸ்.ஐ ஒருவர், அந்த கும்பால வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து “இந்த விடியாத திமுக ஆட்சியில் காவலருக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியுள்ளது” என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS Tweet about Trichy police Murder
Author
Pudukkottai, First Published Nov 21, 2021, 4:32 PM IST

EPS Tweet about Trichy police Murder

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். திருச்சி நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு பூமிநாதனும்,நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலரும் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது மர்மகும்பல் ஒன்று ஆடுகளை திருடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அதனை கண்ட பூமிநாதனும், மற்றொரு காவலரும் அந்த கும்பலிடம் விசாரித்துள்ளனர். உடனே போலீசிடம் அந்த கும்பல் தப்பிக்க முயற்சி செய்துள்ளது. தப்பித்து சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க, எஸ்.எஸ்.ஐ பூமிநாதனும், மற்றொரு  காவலரும் தனித்தனி பைக்கில் விரட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த காவலர் வழி தவறி செல்ல, பூமிநாதன் கும்பலை பிந்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளார். திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோட்டில் களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி அருகே ஒரு பைக்கில் சென்ற இரு பேரை மடக்கி பிடித்துள்ளார் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் . மற்றொரு காவலருக்கு தனது வாக்கிடாக்கி மூலம் தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள், அந்த கும்பல் பூமிநாதனை வெட்டி படுகொலை செய்து தப்பிவிட்டது. ஆடு திருடும் கும்பலால் காவலரே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலை நடத்த இடத்தில், திருச்சி மண்டல் ஐஜி கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து, உதவி ஆய்வாளர் பயன்படுத்திய வாக்கி டாக்கி மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மேலும் கொலை கும்பல் தப்பி சென்றாக கூறப்படும் 3 பைக்குகள் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் தப்பிய சென்ற கொலை கும்பலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சமூக விரோதிகளால் திருச்சி,நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியம் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஐ படுகொலை செய்து தப்பியோடிய கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மீண்டும் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது என விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஆடு திருடர்களால் கொலை செய்யட்ட திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.அதுபோல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios