அதிமுகவில் தனக்குப் பிறகு வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் சுட்டிக்காட்டவில்லை என்றும் உண்மை, உழைப்பு, ஆளுமைத்திறன் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதிமுகவில் தலைமை ஏற்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர்  எடப்பாடி  பழனிசாமி , நாட்டிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மின்விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.. 

சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதாதான் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் தனக்குப் பிறகு வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் சுட்டிக்காட்டவில்லை என்றும் உண்மை, உழைப்பு, ஆளுமைத்திறன் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதிமுகவில் தலைமை ஏற்கலாம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.