டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றபடி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடித்துக் கொண்டிருக்கின்றனர் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் கலத்தில் அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் இணைவது குறித்து வெளியாகி வருகிறது 

எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, பின்னர் இணைப்பு குறித்து தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றியது எந்த காரணத்திற்காக? டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றபடி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடித்துக் கொண்டிருக்கின்றனர்.