Asianet News TamilAsianet News Tamil

அன்புள்ள அண்ணா... நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது.. ஓபிஎஸ்சை மெர்சல் ஆக்கிய இபிஎஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என ஓபிஎஸ்க்கு, இபிஎஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார்.  

Eps has written a letter to OPS regarding AIADMK candidates contesting local body elections
Author
First Published Jun 30, 2022, 2:54 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் அதிகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு அங்கீகாரம் அளித்து கடிதம் கொடுக்கவில்லை, இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தேர்தலில் போட்டியிட A மற்றும் B பார்ம் விண்ணப்பங்களில் கையொப்பம் இட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை இபிஎஸ் தரப்பு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார்.  மேலும்  அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லையென கூறியுள்ளார். 

ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது பொதுக்குழு கூட்டமல்ல.? இபிஎஸ்யின் புகழ் பாடும் கூட்டம்..! மாவட்ட செயலாளர் விமர்சனம்

Eps has written a letter to OPS regarding AIADMK candidates contesting local body elections

அந்த கடிதத்தில், 

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து,

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு.. ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்..!

இபிஎஸ் பிடிவாதத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அதிமுக..? அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Eps has written a letter to OPS regarding AIADMK candidates contesting local body elections

கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை. அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள். ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திமுகவிற்கு எடப்பாடியார் மறைமுக உதவி.. அதிமுக அலுவலக ஊழியர்களுக் சம்பளம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்.

Follow Us:
Download App:
  • android
  • ios