திமுகவிற்கு எடப்பாடியார் மறைமுக உதவி.. அதிமுக அலுவலக ஊழியர்களுக் சம்பளம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்.
அதிமுக வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவங்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போடாமல் மறுப்பதன் மூலம் மறைமுகமாக அவர் திமுகவுக்கு துணை போகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவங்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போடாமல் மறுப்பதன் மூலம் மறைமுகமாக அவர் திமுகவுக்கு துணை போகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஓபிஎஸ்- இபிஎஸ் என ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கையெழுத்து போட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பொதுக்குழுவை கூட்ட கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் அவரவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்:ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது பொதுக்குழு கூட்டமல்ல.? இபிஎஸ்யின் புகழ் பாடும் கூட்டம்..! மாவட்ட செயலாளர் விமர்சனம்
இதையும் படியுங்கள்: பிரபல ஒட்டல் கழிவறைக்கு சென்ற பெண்.. இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை பசுமை வழி சாலை உள்ள அதிமுக மூத்த தலைவர் பன்னீர்செல்வம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட வேண்டும், கையெழுத்து போடுவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது, ஆனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பே இல்லை எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அந்த கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது, அதேநேரத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மறைமுகமாக திமுகவுக்கு துணை போகின்றனர், அதனால்தான் வேட்பாளர்களின் ஏ,பி படிவத்தில் அவர் கையெழுத்திடவில்லை, அதேபோல அதிமுக தலைமை கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பொருளாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டுள்ளார். கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திடவில்லை, எனவே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது, இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கட்சிக்கு தர தயாராக இருப்பதாக தீபக், தீபா இருவரும் பன்னீர்செல்வத்திடம் கூறினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு செவிமடுக்கவில்லை, வேலுமணிக்கு சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதற்கு ஓபிஎஸ் திமுக உடன் இனக்காமாக இருப்பதே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர், ஓபிஎஸ்சுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதிமுக சின்னத்தை எதிர்நோக்கியிருந்த தொண்டர்கள் இப்போது சுயச்சை சின்னத்தில் போட்டியிடலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த அவல நிலையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமிதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.