பிரபல ஒட்டல் கழிவறைக்கு சென்ற பெண்.. இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னையில் பிரபல ஓட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்துவிட்டதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னையில் பிரபல ஓட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்துவிட்டதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு புரசைவாக்கத்தில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். பின்னர் அந்தபெண் உணவகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, பக்கத்தில் ஆண் கழிப்பறையிலிருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் அந்த பெண்ணை படம் எடுக்க முயன்றுள்ளார்.
இதையும் படிங்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே ஆண்கள் கழிப்பறையை மூடிவிட்டு கூச்சலிட்டு உள்ளார். உடனே ஓடிவந்த உறவினர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த வாலிபரை பிடித்து வைத்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்போனில் படம் பிடித்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது யூசுப்(22) என்பதும் இவர் புரசைவாக்கத்தில் தங்கி ஓட்டல் அருகேயுள்ள பிரபல ஷாப்பிங் கடையில் ஊழியாக 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க;- வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப்படுகொலை.. சிதறிக் கிடந்த ரத்தம்.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்
பின்னர் போலீசார் யூசுப்பின் செல்போனை ஆய்வு செய்தபோது, படம் எடுத்ததாக தெரிவித்த பெண்ணின் புகைப்படமோ, வீடியோ எதுவும் இல்லை. ஆனால் 10க்கும் மேற்பட்ட பெண்களை யூசுப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்திருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் யூசுப் கழிப்பறைக்கு செல்லும் பெண்களை செல்போனில் படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்ததையடுத்து அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.