ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது பொதுக்குழு கூட்டமல்ல.? இபிஎஸ்யின் புகழ் பாடும் கூட்டம்..! மாவட்ட செயலாளர் விமர்சனம்

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றால் அது பொதுக்குழுவாக இருக்காது இருக்காது, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்படக்கூடிய புகழ்பாடும்  கூட்டமாக இருக்கும் என அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

AIADMK district secretary has said that the general body meeting will not be held on July 11

இபிஎஸ்யை தவறாக வழி நடத்துகின்றனர்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தனர். இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணியினர், பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுவதாக புகார் தெரிவித்தனர். இந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் கூறுகையில்,  தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற பணியிடங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் தயாராக இருந்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் வேட்பு மனுவில் கையொப்பமிடமும் Form A, Form B ஆகிவற்றில் கையொப்பமிட முன்வந்த நிலையில் இபிஎஸ் தலைமையிலான குழு தேர்தலை புறக்கணிப்பு என அறிவித்தது திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாடு என தெரிவித்தார்.

நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதால் நான் விளம்பர பிரியனா? எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

AIADMK district secretary has said that the general body meeting will not be held on July 11

 ஜெயலலிதா நினைவு இல்லம்

கட்சியின் இந்த அறிவிப்பால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்து இருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த நிலையில் இபிஎஸ்சின் இந்த அறிவிப்பு கட்டணத்திற்குரியது என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை ஒரு கும்பல் தவறாக வழி நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார். அதிமுக தலைமை கழக ஊழியர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் காசோலையில் கையொப்பமிட்ட நிலையில் அதனை இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் புறக்கணித்து இருப்பதாகவும் இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா  இல்லத்தை அவரது வாரிசுகளான தீபா தீபக் ஆகியோர், அதிமுக  அந்த இடத்தை விலைக்கு வாங்கி நினைவிடமாக மாற்ற முன்வந்தால் அதனை வழங்க தயார் என அறிவித்ததாகவும் இதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியிடம்  தெரிவித்த நிலையில் அதுகுறித்து முடிவெடுக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக கவுன்சிலர்களை அலறவிட்ட அமைச்சர் கே.என்.நேரு..! நடந்தது என்ன?

மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

AIADMK district secretary has said that the general body meeting will not be held on July 11

இபிஎஸ் புகழ்பாடும் கூட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து மறைந்த அவரது இல்லத்தை நினைவில்லமாக வேண்டும் என்ற தொண்டர்கள், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற இபிஎஸ் அவர்கள் முன் வராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். நடைபெற்ற முடிந்த பொது குழுவில் சுய லாபத்திற்காக தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அந்த தீர்மானத்தில் திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் மேலும் ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இடம் பெற்று இருந்ததாகவும் தெரிவித்தார்.  அடுத்த மாதம் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறாது எனவும் அதையும் மீறி அது நடைபெற்றால் அதை பொதுக் கூட்டமாக மட்டுமே கருத முடியும் என்றும், எடப்பாடி பழனிசாமி புகழ் பாடும் கூட்டமாக அமையும் என தெரிவித்தார்.  ஏனெனில் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக கவுன்சிலர்களை அலறவிட்ட அமைச்சர் கே.என்.நேரு..! நடந்தது என்ன?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios