EPS and OPS lay foundation for jayalalithas memorial

சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து அடிக்கல் நாட்டினர். ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் ஃபீனிக்ஸ் பறவைப்போல் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஏற்கனவே அறிவித்தது. 

இந்த மண்டபம் கட்டுவதற்காக 50 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவில் டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. 

நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்துஅடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஜெயலலிதா நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. அதன் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.