இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற தொடர்பாக டெல்லி போலீசை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன் டெல்லி நட்ச்சத்திர ஓட்டலில் 1.30 கோடி ரூபாயுடன் சுகேஷ் சந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இரட்டை இலை சின்னத்தை பெற்று தர டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார்.

அதனடிப்படையில் டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கில் தினகரனை மே 15 ஆம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது தினகரன் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் தினகரன் மேலும் கதிகலங்கி போயுள்ளார்.