Asianet News TamilAsianet News Tamil

திமுக பிரமுகர் வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை.. அதிர்ச்சியில் தலைமை..!

ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Enforcement officers raid DMK official house
Author
Rameswaram, First Published Aug 9, 2021, 5:39 PM IST

ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதியில் வசிக்கும் வில்லாயுதம் என்பவர் திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளராக உள்ளார்.  இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றார். இதையடுத்து, திமுக பிரமுகர் வில்லாயுதத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, திமுக பிரமுகர் வில்லாயுதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Enforcement officers raid DMK official house

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து திமுக பிரமுகர் வில்லாயுதம் வீட்டிற்கு சென்ற 8 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் மற்றும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். திமுக பிரமுகர் வில்லாயுதம் வீடு மற்றும் விடுதி அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆளும் திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios