செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை..! கரூரில் 3 இடங்களில் மீண்டும் ரெய்டால் திமுகவினர் அதிர்ச்சி

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் உதவியாளரின் வீடு கிராணைட் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளனர். 

Enforcement Directorate raids places including Senthil Balaji aide house in Karur

செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 10 வருடங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்தை கைது செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரையும் அமலாக்கத்துறை தேடி வருகிறது.

இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடு வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ளது. நேற்று மாலை வேடசந்தூர் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர், சாமிநாதனின் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையானது இன்று காலை நிறைவடைந்தது. 

Enforcement Directorate raids places including Senthil Balaji aide house in Karur

செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் அம்பாள் நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூர், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த இடத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் மீண்டும் சோதனையால் கரூர் மாவட்ட திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios