#BREAKING என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டின் மனைவி அமமுகவில் போட்டி... கடுப்பில் தூக்கியடிக்கப்பட்ட கணவர்...!
அமமுக சார்பில் ராணி ரஞ்சிதம் (54) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர். இவரது கணவர் வெள்ளத்துரை நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையராக உள்ளார்.
நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமமுக சார்பில் ராணி ரஞ்சிதம் (54) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர். இவரது கணவர் வெள்ளத்துரை நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையராக உள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பன், திருப்பாசேத்தியில் எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் பிரபு, பாரதி மற்றும் மதுரையில் எஸ்ஐக்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் உள்ளிட்ட என்கவுன்டர் சம்பவங்களை வெள்ளத்துரை நடத்தியுள்ளார். ராணி ரஞ்சிதம் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. எம்.பில், பி.எச்டி படித்துள்ளார். வெள்ளத்துரை திருச்சியில் எஸ்.ஐ.யாக பணியாற்றிய போது, அங்குள்ள ஈவேரா கல்லூரியில் தமிழித்துறை விரிவுரையாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், வெள்ளதுரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.