சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் நடைமேடை 25 ல் நிறுத்தப்பட்டிருந்தது.அதில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் பசுபதி ராஜன் ஈடுப்பட்டிருந்தாா்.
சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதை அருகே விமானங்கள் நிறுத்தும் இடத்தில் பணியிலிருந்த ஏா் இந்தியா ஊழியா் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் உள்ள ஏா் இந்தியா அலுவலகத்தில் கமா்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றியவா் பசுபதி ராஜன்(57) இவர் சென்னை அயனாவரத்தை சோ்ந்தவர். சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் நடைமேடை 25 ல் நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் பசுபதி ராஜன் ஈடுப்பட்டிருந்தாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் அவா் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தாா். கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் பசுபதி ராஜன் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்ததுடன் , விமான நிலைய ஊழியர் மரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனா். ஏா் இந்தியா ஊழியா் ஒருவா் விமானம் அருகே பணியிலிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 20, 2021, 4:54 PM IST