தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து திடீர் அழைப்பு வந்துள்ளதால் அவர், மத்திய அமைச்சராவது உறுதி என தகவல்கள் கூறுகின்றன. 

தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடித்து துணை முதல்வர் ஓ.பி.ரவீந்திரன் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே. ஆகையால் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.ஆருக்கு இடம் கிடைக்கலாம் எனக்கூறப்பட்டது.

 

அதனை உறுதி செய்யும் வகையில் சற்று முன் ஓ.பி.ரவீந்திராத் குமாருக்கு டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவசரமாக பிரதமர் அலுவலகம் வருமாறு அழைப்பு வந்துள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி பதவியேற்க உள்ள நிலையில், 4.30 மணிக்கு மேல் மத்திய அமைச்சராகும் எம்.பி.,களை மோடி சந்தித்து பேச இருக்கிறார். ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.