Asianet News TamilAsianet News Tamil

40 தொகுதிகள் கேட்கும் பாஜக.. இதுதான் கொடுக்க முடியும் என கறாராக கூறிய அதிமுக..!

அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Electoral alliance with AIADMK ... BJP wants 40 constituencies
Author
Chennai, First Published Nov 22, 2020, 11:40 AM IST

அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அப்போது அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமித் ஷா, மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.

Electoral alliance with AIADMK ... BJP wants 40 constituencies

அங்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Electoral alliance with AIADMK ... BJP wants 40 constituencies

இந்நிலையில், அமித் ஷா முன்னிலையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, பாஜக 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டதாகவும், அதற்கு 25 தொகுதிகள் ஒதுக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பேசி முடிவு செய்துவிட்டு, அதன்பின்னர் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என அதிமுக கூறியதாக தெரிகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios