Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நிதி வசூலிக்கும் மதிமுக... திணறும் கட்சி நிர்வாகிகள்..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வசதியாக தேர்தல் நிதி வசூலிக்கும் பணியில் மதிமுக மும்மரமாக உள்ளது. பெரும் தொகையை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Election finance charge MDMK...party executives
Author
Tamil Nadu, First Published Jan 8, 2019, 10:57 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வசதியாக தேர்தல் நிதி வசூலிக்கும் பணியில் மதிமுக மும்மரமாக உள்ளது. பெரும் தொகையை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுவதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக இருக்கிறார். கடந்த காலத்தைப்போல உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வைகோ விரும்பவில்லை. திமுக தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்றத்துக்குள் செல்ல ஆர்வமாக இருக்கிறார் வைகோ. தேர்தல் செலவு பிடிக்கும் என்பதால், தேர்தல் நிதியை வசூலித்து தர மாவட்ட செயலாளர்களுக்கு அண்மையில் வைகோ உத்தரவிட்டார்.  Election finance charge MDMK...party executives

தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 50 லட்சம் வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்தத் தொகையை வசூல் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் வைகோ. எல்லா மாவட்டத்திலும் இந்தத் தொகை கிடைக்காது என்றாலும், மதிமுக செல்வாக்காக செல்ல மாவட்டங்களில் கண்டிப்பாக வசூலித்து தரும்படி வைகோ உத்தரவிட்டுள்ளார். Election finance charge MDMK...party executives

குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, துாத்துக்குடி போன்ற மாவட்டச் செயலாளர்களிடம் இந்தத் தொகையை வைகோ எதிர்பார்க்கிறார். மதிமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகி நீண்ட காலம் ஆகிவிட்டது. பெரிய அளவில் பதவியில் இல்லாத நிலையில் பெரிய தொகையை எப்படி வசூலித்துக்கொடுப்பது என்று மாவட்டச் செயளார்கள் அதிர்ச்சியாகி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறுகிறார்கள். எம்.பி. தொகுதி எப்படியும் தங்களுக்கு கிடைக்கும் என்ற ஆசையில் உள்ள கட்சி நிர்வாகிகள் சிலர், இந்தத் தொகையை வசூலித்து தர ஆர்வமும் காட்டிவருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios