election commission notice
கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தததையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை எதிர்த்து அபோது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்தினார். இதனால் அக்கட்சி இரண்டாக உடைந்தது
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதிமுக என்ற பெயரை அரு தரப்பினருமே பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தற்போது டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னமம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், மதுசூதனனுக்கு ஒதுக்கப்பட்ட மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் தவறாக சித்தரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ்க்கு வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஆர்.கே.நகரில் விதிகளை மீறி வழிபாட்டுத்தலம் அருகே தேர்தல் பணிமனை அமைத்ததாக, தினகரன் தரப்பினர் மீது ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
