கூட்டணி யாரோடு? எனும் கேள்விக்கு இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை அ.தி.மு.க. ஆனால் அதற்குள், நாடாளுமன்ற தேர்தலுக்கான பட்ஜெட்டை பிக்ஸ் செய்துவிட்டார் எடப்பாடி! என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். சமீபத்தில் நடந்த அன் அபீஷியல் அமைச்சர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தெளிவாக அறிவித்துவிட்டாராம் எடப்பாடி. 

தொகையை கேட்டு அமைச்சர்களுக்கே கண்ணாமுழி வெளியே வந்ததென்றால் நம்ம நிலைமை என்னவாகும்!? சரி தொகைதான் என்ன?....கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு கோடியை தாண்டுகிறதாம். ஜிவ்வ்வ்வ்வுன்னு ஏறி, சர்ர்ர்ர்ருன்னு சுத்துதுல்ல தல!? அந்த கூட்டத்தில் அப்படி என்னதான் அறிவிக்கப்பட்டது? என்று நாம் கேட்டதற்கு வந்துவிழுந்த பதில் இதுதான்...”கூட்டணி, சர்வே, செல்வாக்கு என்று எதுல நாம சறுக்கினாலும் கூட மக்களை சந்தோஷப்படுத்திட்டோம்னா சூழல் நம்ம பக்க திருந்திடும்!ன்னு தலைமை திட்டம் போடுது. 

அதன்படி ஒரு சட்டசபை தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு பண்ண பிளான் பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஐந்து அல்லது ஆறு சட்டசபை தொகுதிகள் வருது. அப்படி பார்த்தா ஒவ்வொரு நாடாளு மன்ற தொகுதிக்கும் இருபத்தைந்து முதல் முப்பது கோடி ரூபாய் செலவாகுது. அந்த வகையில் புதுச்சேரியையும் சேர்த்து நாற்பது தொகுதிகளுக்கும் ஆயிரத்து நூறு கோடிகளுக்கும் மேலே செலவு செய்ய திட்டம் போட்டிருக்குது தலைமை! இதில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மட்டுமே தலைமை தரப்போகிறதாம். மீதியை அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குள்ளே வரும் அமைச்சர்கள்தான் பார்க்க வேண்டுமாம்! 

இதைச் சொன்னதும்தான் தாமதாம் கடுப்பேறிக் குதித்து விட்டார்களாம் சில அமைச்சர்கள். ஒரு டம்மி துறையின் அமைச்சரோ ’உங்களையெல்லாம் மாதிரி நல்லா மஞ்ச குளிக்கிற துறை என்னோடதுன்னு நினைச்சீங்களா? கேவலம் டீக்கும், காஃபிக்கும் என் கையில இருந்து போட்டுனு இருக்கேன். என்னை போயி நூறு கோடி கொடும், எழுபது கோடி கொடுன்னு கேட்டாக்க தெருக்கோடியில போயி நின்னுக்குவேன். அப்புறம் நான் எப்படி பேசுவேன், யார்ட்ட பேசுவேன்னு எனக்கே தெரியாது. 

பசையான துறையை வெச்சுக்கிட்டு அம்மா இறப்புக்கு பிறகு கேள்வியே இல்லாம சம்பாதிச்சு கொட்டுறவங்க பொறுப்பை ஏத்துக்குங்க. நீங்க வெச்சிருக்கிற பணத்துல ஜஸ்ட் கிள்ளி கொடுத்தாலும் போதும் எக்ஸ்ட்ரா ஆயிரம் கோடி கிடைக்கும்.” என்றபடி கண் சிவக்க உட்கார்ந்தாராம். ஆடிப்போயிட்டாங்களாம் சக அமைச்சர்கள். அப்புறம் தலைமை ஆளுங்க தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி, எல்லாரையும் உற்சாகப்படுத்தி ’நாற்பதும் நமதே! நாளை நமதே!’ன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க.” என்று முடித்தார்கள்.

ஆனாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ள ‘ஆயிரம் கோடி சம்திங்’ தொகை என்பது தேர்தலின் ஜனநாயகத்தை வம்பிழுத்துப் பார்க்கும் செயலே! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.