Asianet News TamilAsianet News Tamil

திருநாவுக்கரசருக்கு போட்டியாக சீட் கேட்கும் குஷ்பு... திருச்சியில் குஸ்தி..!

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி தொகுதியை குறி வைத்து திருநாவுக்கரசருக்கும், குஷ்புவுக்கும் திருச்சியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

elangovan Khushboo Contest petition for Kanyakumari
Author
Tamil Nadu, First Published Mar 16, 2019, 4:12 PM IST

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி தொகுதியை குறி வைத்து திருநாவுக்கரசருக்கும், குஷ்புவுக்கும் திருச்சியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் ஒன்பது தொகுதிகளுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. elangovan Khushboo Contest petition for Kanyakumari

ஒன்பது தொகுதிகளில் திருவள்ளூர், கன்னியாகுமரி தொகுதிகளுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் விருப்ப மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.elangovan Khushboo Contest petition for Kanyakumari

திருவள்ளூர் தனி தொகுதி என்பதால் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு அளித்துள்ளனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.elangovan Khushboo Contest petition for Kanyakumari

தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர். ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரனும் நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios