தெலுங்கானாவில் சற்று முன்பு தொடங்கிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான பீப்பிள் பிரண்டிற்கும், கடுமையான போட்டி நிலவி வருகிறது. முன்னிலை வகிப்பது என்னவோ தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தான்.

தற்போது நொடிக்கு நொடி ரிசல்ட் மாறுவதால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. இதனால் அங்கு அங்கு தொங்கு சட்டசபை  உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தேர்தல் ரிசல் வருவதற்கு முன்பே களத்தில் குதித்துள்ளது.  காங்கிரஸ் கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி தங்கள் பக்கம் இழுக்க இப்போதே குதிரை பேரத்தில்  குதித்துள்ளதாக தகவல் உலாவருகிறது.   

அதேபோல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மாரி ஜனார்த்தன ரெட்டிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி போன் செய்து காங்கிரஸ் தரப்பிற்கு மாறும்படி கூறியதாக போன் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இப்போதே காங்கிரசின் கர்நாடக கிங் மேக்கரான டிகே சிவக்குமார் தெலுங்கானாவில் தனது பலத்தை காட்ட களத்தில் குதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  குலாம் நபி ஆசாத், அஹமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ் என ஒட்டுமொத்த காங்கிரசின் பெரும் தலைகள்  தெலுங்கானாவில்  வெயிட்டிங்கில் உள்ளது.

எப்படியும் தொங்கு சட்டசபை உறுதியென தெரிந்துகொண்ட  காங்கிரஸ் பெங்களருவில் நவீன வசதிகள் கொண்ட தங்கும் வசதிகள் கொண்ட ரிசார்ட்டையும்  ரெடியாக வைத்திருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இப்படி காங்கிரஸ் தயாராக இருக்கும் சூழலில் தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மாற்றாக கட்சிகளை அடித்து நொறுக்கிவிட்டு பெரிய வெற்றியை நோக்கி  சென்றுகொண்டிருக்கிறது.