கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்  எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக அக்கட்சியின் தேசிய  தலைவர் அமித்ஷா உளரிக் கொட்டியது பெரும் பரபரப்பை ஏங்றபடுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  நாடு முழுவதும் ஒரே கட்சி ஆட்சி அது பாஜக ஆட்சி என்ற டார்கெட்டுடன் மோடி மற்றும் அமித்ஷா போன்றோர் செயல்பட்டு வருகின்றனர்.

.இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில்  வரும் மே மாதம் 12 ஆம் தேதி  தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகாவிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்கான தெரிவித்தார்.

அவர் ஆவேசமாக பேசி வந்த போது, ஊழல் மலிந்த ஆட்சி எது என்ற போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும் என்று உளரிக் கொட்டினார்.

அமித்ஷாவின்  பேச்சை கேட்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே அமித்ஷா அருகில் இருந்த இன்னொரு தலைவர் அவருக்கு தவறை சுட்டுக் காட்டியவுடன் சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக காங்கிரஸ் அரசுதான் என்று மாற்றி கூறினார்.

அமித்ஷாவின் பேச்சு பாஜக தொண்டர்களிடையே அதிர்ந்நியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நெமையாக கிண்டல் அடித்து வருகின்றன.