சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன். இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன். வெகுகாலமாக அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

அப்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். எடப்பாடியின் சகோதரர் விஸ்வநாதன், சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக பதவியேற்றவர். முதல்வரின் ஒன்றுவிட்ட சகோதரரே திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.