நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

 பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை குறிப்பிடும் வகையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சாதனை கொலுவை அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீட் தேர்வில் சாதனை புரிந்த அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்ட வேண்டும். மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆளுநரும், தமிழக அரசும் இதை விரைந்து செயல்படுத்த வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார்.