உங்க அம்மாவைவிட நீ மோசமாக சாவாய். மானமிருந்தால், ரோசமிருந்தால், உன்னுடைய பிறப்பு நியாயமாக இருக்குமானால் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சவால் விடுகிறேன்.
ஆ.ராசாவின் கள்ள உறவு பற்றிய பேச்சுக்கு சலசலப்பு எழுந்து அவர்மன்னிப்பு கேட்ட நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பற்றி ஆபாசமாக, அபசகுனமாக அவரது தாயாருடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 
திமுக எம்.பி ஆ,ராசா அவர்கள் சமீபத்தில் திமுக தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவருடைய பேச்சுக்கு பல அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று திருவொற்றியூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது, தனது தாய் குறித்து தவறாக பேசிவிட்டார்கள் என்று கூறி கண்ணீர்விட்டார் முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு திமுக எம்.பி. ஆ.ராசா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “2 நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி அவர்களை பற்றி நான் பேசியது குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வரும் செய்திகளுக்கு விளக்கமளித்தேன். திமுகவின் தலைவர் வணக்கத்திற்குரிய ஸ்டாலின் அவர்களின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். 
என்றாலும் அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அவரது அன்னையார் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி நான் பேசினேன் என்று நானும், ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.
இதற்கு பிறகும் முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடபொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழ்த்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. 
முதல்வருக்கு, அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றி தனி மனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும் மற்றும் ஒப்பீடும் தான், முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேலையில், ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் பேசிய மற்றொரு வீடியோவிலும் எடப்பாடி பழனிசாமியை வம்பிற்கிழுத்துள்ளார். ’’அந்த வீடியோவில் எடப்பாடி உனக்கு நல்ல சாவு வரும் என்றா நினைக்கிறாய்..? உங்க அம்மாவைவிட நீ மோசமாக சாவாய். மானமிருந்தால், ரோசமிருந்தால், உன்னுடைய பிறப்பு நியாயமாக இருக்குமானால் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சவால் விடுகிறேன்.’’எனத் தெரிவித்துள்ளார்
