Asianet News TamilAsianet News Tamil

சொந்த கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத EPS.. கூட்டணி வைத்தால் எப்படி வெல்ல முடியும்? ராமதாஸ் ஆவேசம்.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 என இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிர்வாகிகள், 9  மாவட்டங்களுக்குரிய துணைப் பொதுச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில் செப்டம்பர் 14 இணைய வழியில் நடைபெற்றது.

Edappadi who cannot control his own party... ramadoss
Author
Tamil Nadu, First Published Sep 15, 2021, 10:51 AM IST

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. நம்மால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 என இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிர்வாகிகள், 9  மாவட்டங்களுக்குரிய துணைப் பொதுச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில் செப்டம்பர் 14 இணைய வழியில் நடைபெற்றது.

Edappadi who cannot control his own party... ramadoss

அக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15, 16 தேதிகளில் விருப்ப மனு பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edappadi who cannot control his own party... ramadoss

இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்;- கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா?

Edappadi who cannot control his own party... ramadoss

அதிமுகவுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது. சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பாமகவின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios