edappadi vs ttv dinakaran

சசிகலா ஜெயிலுக்கு சென்ற பின், கட்சியை முழுமையாக கைப்ப்றினார் டிடிவி தினகரன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில், தனது குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் கூட, அதிகார மையமாக மாறிவிட கூடாது என்பதில், ஸ்டாலின் பார்முலா போன்றே செயல்படுகிறார் தினகரன்.

ஆட்சிக்கும் இதே நிலைமைதான். எடப்பாடி பழனிச்சாமியும், மற்றொரு ஓபிஎஸ்ஸாக மாறிவிடக் கூடாது என்பதில், தினகரன் டீம் மிக கவனமாக உள்ளதாம். அதனால், செய்லாளர்கள் நியமனத்தில் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளையே தினகரன் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒன்றை மட்டும் கோட்டை விட்டுவிட்டராம் தினகரன். உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அபூர்வா வர்மாவுக்கு பதிலாக, உள்துறை செயரலாளரக நியமிக்கப்பட்டுள்ள நிரஞ்சன் மார்டி மட்டும் எடிப்பாடி சாய்ஸாம்.

தனக்கு குடைச்சல் வரக்கூடாது என்பதற்காக விடாபிடியாக நின்று, நிரஞ்சன் மார்டியை நியிமித்து கெண்டாராம் எடப்பாடி. ஆனால், மற்ற யாரும் தினகரனிடம் இருந்து தப்ப முடியவில்லையாம்.

திடீர் விஸ்வாசத்தின் உச்சமாக காட்சி அளிக்கும், செங்கோட்டையனுக்கும் ‘செக்’ வைத்துவிட்டாராம் தினகரன். அதனால்தான் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த சபீதாவை தூக்கிவிட்டு, தனது சாய்ஸ்சான உதயசந்திரன் ஐஏஎஸ்சை நியத்துள்ளாராம்.

அதேபோன்று விக்ரம் கபூர், சுனில் பாலிவால், மகேஸ்வரி போன்றவர்களும், தினகரனின் சாய்ஸ் ஆவர். 

மகேஸ்வரியை வணிகவரி துறை இணை அணையராக நியமித்துள்ளதால், வணிகவரித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

வணிகவரித்துறை ஆணையர் சந்திரமவுலி, இணை ஆணையர் பாலாஜி ஆகிய 2 பேரையும் மாற்ற வேண்டும் என கே.வி.வீரமணி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து விந்தாராம். ஆனால், அது ஏற்கபடாததால், அவரும் அப்செட்டில் உள்ளாராம்.

இப்படி அனைத்து தரப்பினருக்கும் தினகரன் செக் வைத்துள்ளதால், அரசு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பலர், உள்ளுக்குள் கடுப்பில் இருக்கிறார்களாம்.

போதாத குறைக்கு, கட்சியின் சார்பாக போட்டியிடபோகும் எம்எல்ஏ, எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆட்சி மன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை சேர்க்காததால், அவருக்கு கவுரவ குறைகளை கொடுத்துள்ளதாம்.

ஆகமொத்தத்தில் ராணுவ கட்டுப்போடோடு விளங்கிய அதிமுகவில், தற்போது எதிர்க்கட்சிகளையும், அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களையும், உட்கட்சியினரையும், வழக்கு நீதிமன்றம் என்ற பிரச்சனை உள்ளிட்ட நான்கு முனை தாக்குதல்களை தினகரன் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.