edappadi speech before less crowd

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திண்டுக்கல் சீனிவாசனின் பரபரப்பு பேட்டியால் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. எடப்பாடிக்கு மிகுந்த வரவேற்புடன் தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆளில்லாத நாற்காலியால் பிசுபிசுத்துபோயின. மறுபுறம், திருவண்ணாமலையில் ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய கூட்டத்தில், பிரம்மாண்டமாக தொண்டர்கள் திரண்டிருந்தனர். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, ஓ.பி.எஸ்., அணியும் இ.பி.எஸ். அணியும் போட்டி போட்டு கொண்டாடி வருகின்றனர். ஒரே நாளில், மதுரையில் எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்தை நடத்தினர்.

சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்துக்கு பந்தக்கால் நடும் விழாவுக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆரைப் பற்றி அவரை யாருக்கும் தெரியாது என்று பேட்டி அளிக்க, அதிமுக தொண்டர்களிடையே இந்த பேட்டி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் சீனிவாசனை பதவி விலக வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் பேனர் கிழிக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு எறியப்பட்டது.

இதற்கிடையே, திட்டமிட்டபடி நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா பாணியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர். உருவத்துடன் மேக்கப் போட்ட கலைஞர்கள் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்தனர். என்னதான் கலைஞர்களை அழைத்து வந்தாலும் கூட்டத்திற்கு வரவேண்டிய தொண்டர்கள் வந்தால்தானே கூட்டம் சிறப்பாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுகவின் செல்வாக்குமிக்க மதுரையில் பல லட்சக்கணக்கான மக்கள் முன்பு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதே மைதானத்தில் வெறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மட்டும் நிறைந்திருக்க காணும் இடம் எல்லாம் காலியாக உள்ள நாற்காலியைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்றார்.

ஆட்சி எடப்பாடியின் பக்கம் இருந்தாலும் கட்சி எங்களிடம் தான் உள்ளது என்று ஓ.பி.எஸ். அணியினர் கூறிவருவது, இந்த கூட்டத்திலும் நிரூபணமானது. மறுபுறம் ஓ.பி.எஸ். அணியினர், திருவண்ணாமலையில் நடத்திய பொதுக் கூட்டத்தில், எங்கெங்கு காணினும் மனித தலைகள் நிறைந்து காணப்பட்டது. அலைமோதிய கூட்டம், அதிமுக ஓ.பி.எஸ். பக்கம்தான் என்பதை காட்டுவதுபோல் அமைந்திருந்தது.