இரு அணிகளாக இருந்த அதிமுக தற்போது 3 அணிகளாக உள்ளது. இதனால், அக்கட்சியில் பெரும் குழப்பமும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. இதையொட் பிரிந்து இருக்கும் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றுப்பட்ட அதிமுகவை விரைவில் பார்க்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

திமுகவில் இருந்து 250 பேர் என்னுடைய முன்னிலையில், அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சியில் இருந்து ஏராளமானோர், அதிமுகவில் இணைய உள்ளனர். சிறப்பான ஆட்சி நடப்பதால், அனைவரும் அதிமுகவையே விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் போதிய மழை இல்லாததால், கடும் வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி, தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். விரைவில், நல்ல முடிவை எதிர்ப்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.