2 EX MLA-கள் உள்பட 12 முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து தூக்கி அடித்த எடப்பாடி.. இதுதான் காரணமா.?
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மொத்தம் 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மொத்தம் 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:-
1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த V . கோவிந்தராஜ் Ex MLA, (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர்)
KE கிருஷ்ணமூர்த்தி, Ex MLA, (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)
JK வெங்கடாசலம். (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்)
சி. கோவிந்தராஜ் (கிருஷ்ணகிரி ஒன்றிய கழக முன்னாள் செயலாளர்)
2. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
அ. விஜய பார்த்திபன் (திருமானூர் கிழக்கு ஒன்றியம், மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைத்தலைவர்.
கண்ணகி குப்புசாமி (கழக இணைச் செயலாளர்)
ப. சுரேஷ்குமார் (அரியலூர் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்)
3. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த
ப. சுப்பிரமணி (வேடசந்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்)
4.தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த
K. சீனிராஜ் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்.
கருப்பூர். கா. சீனி என்கின்ற ராஜகோபால் (தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்)
துறையூர் K. கணேஷ் பாண்டியன், (மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்)
T. வினோபாஜி, (கயத்தார் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது