அதிமுக வேட்பாளர் கு.சித்ராவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் திமுகவின் போலி முகமூடியை கிழித்து தொங்கவிட்டார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 

இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக வேட்பாளர் கு.சித்ராவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் திமுகவின் போலி முகமூடியை கிழித்து தொங்கவிட்டார். 

திறந்தவெளி பிரச்சார வேனில் நின்ற படி பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர், அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி மட்டுமே பிரச்சாரம் செய்து வருவதாகவும், அரசுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திமுக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில் கொடுக்க தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறினார். 

திமுகவின் ஒரே குறிக்கோள் கொள்ளை அடிப்பதும், ஊழல் செய்வதும் தான். திட்டமிட்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறது எனத் தெரிவித்தார்.