Asianet News TamilAsianet News Tamil

கூட்டணியில் இருந்து விலகியதில் எந்த மாற்றமும் இல்லை..முடிவில் உறுதியாக உள்ளோம்- பாஜகவிற்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்

பாஜக தேசிய தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை, பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கையும் வைக்கவில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

Edappadi Palaniswami has said that there is no change in the alliance break with BJP KAK
Author
First Published Oct 4, 2023, 1:02 PM IST

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் மீண்டும் சமரச பேச்சு நடப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து அதிமுக தலைமையில் அமையவுள்ள கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எந்த எந்த கட்சி இணையும் என்பதை பொறுத்திருந்த்து பாருங்கள் என தெரிவித்தார். பாஜக துணை தலைவர் விபி துரைசாமி அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறிய கருத்திற்கு நான் என்ன சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியவர், எங்கள் கருத்து இது தான், முடிவும் இது தான் என தெரிவித்தார்.  2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை தலைமை கழகத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு தினந்தோறும் இதனையே கேட்டுகொண்டால் நாங்கள் என்ன செய்வது.

Edappadi Palaniswami has said that there is no change in the alliance break with BJP KAK

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி

அதிமுக- பாஜக தனித்தனியாக போட்டியிடுவதால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு,  இது தவறான ஒன்று, மக்கள் மனதில் எப்படி இருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு தான் முடிவு தெரியும். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெல்லும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஒரு தொகுதியில்  324 வாக்குகள் மற்றொரு தொகுதியில்  7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். 

நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் குறைவாக 10 தொகுதியிலும், ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில்  7 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே இந்த முறை உறுதியாக 40 இடங்களில் வெற்றி பெறுவோம். அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், மக்கள் திட்டங்களை செயல்படுத்ததான், தென்னை விவசாயிகள் கோரிக்கைக்காக சந்தித்தார்கள். மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Edappadi Palaniswami has said that there is no change in the alliance break with BJP KAK

தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது

சந்தித்தா கூட்டணியா.? திமுக சந்தித்தா கூட்டணி என சொல்ல மாட்டுறீங்க என ஆவேசப்பட்டார். எனவே நேற்றைய சந்திப்புகும் கூட்டணிக்கு சம்பந்தம் இல்லை. எங்கள் முடிவு உறுதியான முடிவு. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் இரட்டை இலை சின்னம் பறிக்கப்படுமா என கேள்விக்கு, நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் வழங்கிய உத்தரவு,  எங்களை பாஜக தலைவர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா என யாரும் எந்த அழுத்தம் கொடுக்கவில்லை, தமிழகத்தில் நடந்த நிகழ்வு தொண்டர்கள் மனநிலையை காயப்படுத்தியுள்ளது.

தேர்தல் வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும், தலைவர்களை மட்டும் வைத்து கட்சி நடத்த முடியாது. ஆகவே தொண்டர்களின் உணர்வுகளை மதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு எந்த சீட்டும் பேரம் பேசவில்லை, செய்திகளில் வரும் தகவல்கள் தவறானவை 100க்கு 100 தவறானவை பாஜகவிற்கு 20 சீட் கொடுப்பதாகவும் பேசவில்லை, பாஜக மாநில தலைவர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அதிமுக வைக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

இது ஆரம்பம் தான்! ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விடும் அண்ணாமலை.! எஸ்.ஆர்.சேகர் சரவெடி.!

Follow Us:
Download App:
  • android
  • ios