அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக..! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது- இபிஎஸ்

அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர்  ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi Palaniswami has condemned the raid on former minister Kamaraj house

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை

 அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும்  49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு ஆதரவாக அதிமுகவினர் திரண்டு உள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!

Edappadi Palaniswami has condemned the raid on former minister Kamaraj house

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் நடைபெறும் சோதனை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிகாலையிலேயே காமராஜ் வீட்டில் திபுதிபுவென நுழைந்த விஜிலன்ஸ்.. FIRல் உள்ள விவரங்கள் என்ன? பரபரப்பு தகவல்.!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios