Asianet News TamilAsianet News Tamil

நம்ப வைத்து ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி... உண்மையை கூறச்சொல்லும் டி.டி.வி.தினகரன்..!

கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும்  ஒட்டிக்கொண்டதில் காட்டிய அக்கறை

Edappadi Palanisamy who was deceived into believing ... TTV Dinakaran who tells the truth
Author
Tamil Nadu, First Published Sep 8, 2020, 11:34 AM IST

நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர்  தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். Edappadi Palanisamy who was deceived into believing ... TTV Dinakaran who tells the truth

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கூறுகையில், ‘’நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர்  தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?Edappadi Palanisamy who was deceived into believing ... TTV Dinakaran who tells the truth

கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும்  ஒட்டிக்கொண்டதில் காட்டிய அக்கறையில் துளியையாவது மாணவர்களின் மீது  செலுத்தி அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்று தமிழக அரசு உடனடியாக விளக்கவேண்டும்’’எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios