அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில்,  அரசுக்கு எதிரான மற்றும் அதிமுக கட்சியின் கொள்கைக்கு மாறாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் பதவி பறிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சிவகங்கையைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன், `பாஜவை எப்போது கழட்டி விடலாம்னு நாங்கள் நினைக்கிறோம்னு'' பேட்டி கொடுத்தார். இது எடப்பாடிக்கு தெரிந்ததும், பாஸ்கரனை சத்தம் போட்டார். அவ்வளவுதான் மாலையிலேயே தான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் பல்டி அடித்தார். 

இதையும் படிங்க;-  சசிகலா ரிலீஸாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை... ஓபிஎஸை அலறவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

அதேபோல, ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கருப்பண்ணன் ஆகியோர் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தனர். ரஜினி விவகாரத்தில், பெரியாருக்கு ஆதரவாகவும், ரஜினியை கண்டித்தும் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பேட்டியளித்தனர். ஆனால், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ரஜினிக்கு ஆதரவாக பேட்டி அளித்தார். அதேபோல், சசிகலா விரைவில் சிறையில் வெளிவரவேண்டும் என பிராத்திகிறேன் எனவும் தெரிவித்தார். இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;-  https://tamil.asianetnews.com/politics/if-rajini-speaks-the-country-is-not-too-rajendra-balaji-becomes-fanatic--q4niha

இது கட்சிக்குள் கடும் விமர்சனத்தை எழுந்தன. மேலும், ஆளும் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று பலர் கூறி வந்ததால் முதல்வர் எடப்பாடியை எரிச்சல் அடைய செய்தது. இதனையடுத்து, அமைச்சர்களை தலைமைச்செயலகத்தில் வைத்து தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர், தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அமைச்சர்களை எச்சரித்தார். மேலும், மாநகராட்சி. நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் கூட்டணி குறித்து அமைச்சர்கள் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். மேலும், சசிகலா விடுதலையாவது தொடர்பாக சில அமைச்சர்களிடம் முதல்வர் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.